Advertisment

கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30 ஆம் தேதி, மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று, முதல் மருத்துவமனை தினம், தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், சென்னை, எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் மருத்துவமனை தினத்தை கொண்டாடும் விதமாக 30 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.