Hospital admission to viral police men

Advertisment

பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டகாவலர்துறை ரீதியிலான விசாரணையின் போது மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அந்தச்சம்பவத்தின் பின்னணியில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகபாண்டி என்பவர் பயணம் மேற்கொண்டார். அப்போது பேருந்தின் நடத்துநர் காவலர் ஆறுமுகபாண்டியிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகப்பாண்டி, ‘காவலர் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது’ எனக் கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்திருந்தது. அதில், “காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. அதே சமயம் உரிய வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் போக்குவரத்து துறையின் பரிந்துரைப்படி டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்து ஆயுதப்படை காவலர் ஆறுமுகபாண்டியனிடம் துறைரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பொழுது திடீரென காவலர் ஆறுமுகபாண்டியன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.