Advertisment

சாலையில் பாய்ந்த குதிரை-அதிர்ஷ்டவசமாக தப்பிய வாகன ஓட்டி

 Horse jumps onto road - driver lucky to escape

Advertisment

பரபரப்பான சாலையில் திடீரென குதிரை ஓடிவந்து இரு சக்கரத்தின் மீது மோதி கீழே விழுந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் சின்னி கவுண்டம்பாளையத்தில் உள்ள மில் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் நந்தகுமார் பொங்கலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் மில்லுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குதிரை ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது.

இதில் நந்தகுமார் இருசக்கர வானகத்தின் மீது குதிரை மோதி சாலையில் பல்டி அடித்து விழுந்தது. இதில் நந்தகுமார் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேய்ச்சலுக்கு விடப்பட்ட குதிரை சாலையில் பாய்ந்தது விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

CCTV footage viral video
இதையும் படியுங்கள்
Subscribe