Advertisment

பதற வைக்கும் 'மங்கி குல்லா' கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

Horrifying 'Monkey Gulla' robbers-CCTV footage released shocks

தஞ்சாவூரில் 'மங்கி குல்லா' அணிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் பன்னீர்செல்வம் இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நேற்று இரவு மகள்கள் மற்றும் தாய் இந்திராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது இரவில் முன்பக்க கேட்டை திறப்பது போல் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது மேலாடை அணியாமல் முகத்தில் மங்கி குல்லா அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்து நகைகளைப் பறித்துச் சென்றனர். அதேபோல் கையில் வைத்திருந்த துணியால் வீட்டின் கதவில் தங்களுடைய கைரேகை பதிந்து விடக்கூடாது என்பதற்காக துடைத்துவிட்டு சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மங்கி குல்லாவுடன் வந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

police Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe