nn

காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்தபெண்ணின்பெற்றோர், காதலனை நடு ரோட்டில்வைத்து வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் வேலை செய்து வந்தஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புஅவதானப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜெகனை பிடித்த மணப்பெண்ணின் அப்பா மற்றும் அவரது உறவினர்கள் நடு ரோட்டிலேயே வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி அணை காவல் நிலைய போலீசார்சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஜெகனின் உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என ஜெகனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், கொலை செய்தவர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என உறுதி அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment