திருப்பூர் அருகே கோர விபத்து... மூவர் உயிரிழப்பு!

Horrible incident near Tirupur...

திருப்பூர் அருகே ஏற்பட்ட காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது காக்கப்பள்ளம். அப்பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருப்பூரை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 ஆண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதுபோல் திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்து மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில் காரில் இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மூன்று பேர் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incidnet thirupur
இதையும் படியுங்கள்
Subscribe