ேிு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 15ஆம் தேதிமுதல் 27ஆம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.