Advertisment

'ஓய் டிரைவரே நீர் பதில் சொல்லணும்..'-நிற்காமல் சென்ற பேருந்து; ஓடிச் சென்ற பெண்கள்

'Hey driver, you have to answer..' - The bus that didn't stop; The women ran away

கன்னியாகுமரியில் அரசு பேருந்து ஒன்று பெண்கள் நிறுத்தியும் நிற்காமல் சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு பகுதியில் பெண் பயணிகள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்பொழுது 89Cஎன்ற எண் கொண்ட பேருந்து வந்தது. பெண்கள் கையை நீட்டி பேருந்தை நிறுத்த முற்பட்ட போதிலும் நிற்காமல் சென்றது. சிறிது தூரம் சென்ற பேருந்து நின்ற நிலையில் பெண் பயணிகள் தங்களுடைய கைப்பை உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் பின்புறத்தில் ஓடினர்.

Advertisment

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தாமல் போனது குறித்து கேள்வி எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தகட்சியில் ''ஓய் டிரைவரே கவனித்துக் கொள்ளுங்கள் நீர் பதில் சொல்ல வேண்டி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். பயணிகளை ஏன் ஏற்றாமல் போனீர்கள்" என கேள்வி எழுப்ப, ''இதுதான் பஸ் ஸ்டாப்'' என ஓட்டுநர் பதில் சொல்லும்வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

govt bus kanniyakumari viral video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe