Advertisment

வாலிபர் ஆணவக்கொலை, காதலித்த இளம்பெண் தற்கொலை...

honour killing

நெல்லை மாவட்டம், அம்பையை அடுத்த உள்ளாங்குழி கிராமத்தில் இசக்கி சங்கர் இவர் களக்காடு நகரில் மத்திய கூட்டுறவு வங்கியின் ஊழியர். இவர் தனது வீட்டின் அருகேயுள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்த சத்யபாமா என்ற இளம்பெண்ணை காதலித்திருக்கிறார், இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவரம் அவர்களது வீட்டிற்கு தெரியவரவே, இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதென பேசிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இசக்கி சங்கர் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றபோது, அவரை ஒரு மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது, இந்த செய்தியை 20ம்தேதி நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.

Advertisment

இதனிடையே அந்த பெண்ணின் தந்தை தளவாய் என்பவரையும், அவரது மகனையும் போலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். நேற்று இரவு வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள். இரவுவரை வீடு திரும்பவில்லை. சத்யபாமாவோ தன் காதலன் நினைவாகவே இருந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தனது வீட்டின் பின்புறமுள்ள தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தகவலறிந்த வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். இசக்கி சங்கர் படுகொலை சத்யபாமாவின் தற்கொலை ஆகியவை தொடர்பாக விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆணவப்படுகொலை பதற்றத்தைக் கிளப்பியிருப்பதால் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் தலைமையில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

Tirunelveli honour killing
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe