/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/birthday-udhay.jpg)
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் திமுகவினர் மத்தியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி.சண்முகம், தாமோ அன்பரசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து பெரியார் திடலுக்கு நேரில் சென்று தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார்.
அதே சமயம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் உள்ளிட்ட பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)