Advertisment

பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்!

Honorable doctorate for singer B.Susheela

தமிழக அரசு சார்பில் பிரபல பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும்தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe