Advertisment

தங்கம் தென்னரசுவின் நேர்மை!

honesty of thangam thennasrasu

Advertisment

‘காணொலி வாயிலாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்’ என விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் 2021 – சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்கு, தி.மு.கவினருக்கும், பொதுமக்களுக்கும், சுற்றறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளது, விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.கழகம்.

விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளைக்கழகங்களில், மொத்தம் 372 இடங்களில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துவருவதாக, அந்தச் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதெல்லாம் சரிதான்! ஆனால்.. அந்த அறிக்கையில், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்ராமச்சந்திரனும், வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசுவும் கையெழுத்திட்டதற்குக் கீழ், அவர்களின் பெயருக்கு முன்னால் ‘திரு’ போடப்பட்டிருந்தது. இதுகுறித்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், வாட்ஸ்-ஆப் மூலம் கேட்டோம். உடனே பதிலளித்தார்.

Advertisment

honesty of thangam thennasrasu

‘கண்டிப்பாகத் தவிர்த்திருக்க வேண்டும். Facsimile (சரியான நகல்) மூலம் கையெழுத்து போடப்பட்டது. நான் அம்மாவின் 30 காரியத்துக்காக வெளியூர் செல்லவேண்டிய நிலையில், நேரில் கையொப்பம் இடவில்லை. எப்படி இருப்பினும் இது தவறானதாகும். வருங்காலங்களில் இவ்வாறு நேராமல் எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.’ என்று தெரிவித்தார்.

சரியோ, தவறோ, பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், குறிப்பாக அரசியல் தலைவர்கள், தங்களின் எந்த ஒரு செயலுக்கும் உரிய விளக்கத்தை விரைந்து அளிப்பதில், இத்தகைய நேர்மையைக் கடைப்பிடித்தால், மக்களின் மனதில் நிறைந்திருப்பார்கள்.

Thangam Thennarasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe