“கௌரவமாக நேர்மையாக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும்!” -விஜிலன்ஸ் விழாவில் விமானநிலைய இயக்குநர்!

மதுரை விமான நிலையத்தில் நேற்றுவிஜிலன்ஸ் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஊழியர்கள் இந்திய வரை படம் போல் நின்றனர்.

gg

இந்நிகழ்ச்சியில், மதுரை விமானநிலைய இயக்குநர் V. V.ராவ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமான்டன்ட் உமாமகேஸ்வரன், உதவி கமான்டன்ட் சனிஸ், அனைத்து விமானநிலைய பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைவரும் இந்திய வரைபடத்தில் நின்று லஞ்சம் தவிர்க்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டரை்.

செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய இயக்குநர் V.V. ராவ்,

gg

“லஞ்ச ஒழிப்பு பற்றிய நிகழ்வுக்காக இந்தச் செயின் இந்தியா நிகழ்ச்சி நடக்கிறது. இந்திய வரைபடம் மாதிரி விமான நிலைய ஊழியர்களும், தொழில் பாதுகாப்பு படை வீரர்களும். கஸ்டம்ஸ், இமிக்ரேசன் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் கலந்து கொண்டனர். இதன் முக்கிய நோக்கம், அரசு ஊழியர்கள் கெளரவமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். அரசு ஊழியர்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் செயின் இந்தியா நிகழ்ச்சி.” என்றார்.

airport Tamilnadu vigilance officers
இதையும் படியுங்கள்
Subscribe