Advertisment

100 நாள் வேலைக்கு சென்றவர் வீட்டில் திருட்டு! 

Home theft for someone who went to work for 100 days!

Advertisment

திருச்சி சமயபுரம் மேலவாளாடி மகாவீரன் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி(39). இவர் வழக்கம்போல், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்குச் சென்றிருந்த போது, அவருடைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3.5 சவரன் நகை மற்றும் பணம் 10 ஆயிரம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மாலை வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு தான் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் தெரிந்துள்ளது. இதையடுத்து சமயபுரம் காவல்நிலையத்தில் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களைக் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe