Home robbers .. Rescued neighbors!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரில் உள்ள ஐயர்தோப்பு, காமராஜர் நகர் பகுதியில் வசித்துவருபவர் சக்திவேல். இவர் வங்கியில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி, அப்பகுதியில் வட்டிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

Advertisment

இவர்கள் அனைவரும் வழக்கம்போல் நேற்று (29.10.2021) இரவு சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். விடியற்காலை மூன்று மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சக்திவேல் வீட்டு முன்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. சத்தம் கேட்டு, திடுக்கிட்டு விழித்த சக்திவேல் குடும்பத்தினரைக் கொள்ளையர்கள் கத்திமுனையில் சுற்றிவளைத்தனர்.

Advertisment

அதன்பின் அவர்கள் வீட்டு பீரோவில் இருந்த 15 சவரன் நகை, ரூ. 15 ஆயிரம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள், சக்திவேல் மனைவி, மகள்கள் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் நகை ஆகியவற்றை மொத்தமாக கொள்ளையடித்தனர். அதன்பின் அந்த மர்ம கும்பல், சக்திவேல் குடும்பத்தினரை ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

அறையில் அடைபட்டுக் கிடந்த குடும்பத்தினர், கத்தி சத்தம் போட்டுள்ளனர். அச்சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்தான தகவல், ரோசனை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. அத்தகவலைத் தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவும் சம்பவம் நடந்த இடத்திற்குச் நேரடியாக வந்து விசாரணை நடத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ரோசனை போலீசார், கத்திமுனையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பலை தீவிரமாக தேடிவருகிறார்கள்.