Home raid on Budugai Rural Development Officer!

Advertisment

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் என்பவர் வீட்டில் 83 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில் 3.7 கிலோ வெள்ளி,40 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தத்தின் சகோதரர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.