Home locking due to corona infection ... 50 lakh robbery!

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா. இவருடைய வீட்டில் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைதொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரையும், கடந்த 4ம் தேதி சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைபடுத்தி வைத்திருந்தனர்.

 Home locking due to corona infection ... 50 lakh robbery!

கடந்த 13ம் தேதி காலை சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள், 2 லட்ச ரூபாய் ரொக்கம், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி.பாண்டு மற்றும் டெபாசிட் பத்திரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

Advertisment

இச்சம்பவம் குறித்து மல்லிகா ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் தந்தார். போலீஸார் நேரடியாக வந்து பார்த்து, விசாரித்தனர். தற்போது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.