கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக கரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழகத்தின் நெல்லை, சேலம், ஈரோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 லட்சம் நபர்களிடம் கரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணியில் சுமார் 3,698 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.