/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_108.jpg)
சேலத்தில்பள்ளிக்கூடசிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய ஊர்க்காவல் படை வீரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
சேலம், கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25). இவர்சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றிவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் பலமுறை தனது காதலைச் சொல்லியும் அவர் ஏற்கவில்லை.
இந்நிலையில், நவ. 7 ஆம் தேதி காலை, அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அறிவழகன், தன்னை காதலிக்கும்படி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவருடைய தாயார் அளித்த புகாரின் பேரில்சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய போலீசார் அறிவழகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)