Advertisment

நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை – கொள்ளையர்களுக்கு போலீஸார் வலை!

Home burglary at midnight

Advertisment

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.பி.காலனியை சேர்ந்தவர் ரோசம்மாள்(45). இவர் திருச்சியில் உள்ள ஒரு கான்வெண்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதத்துக்கு முன் அவருடைய தாயார் இறந்துவிட்டதால், ரோசம்மாள் தனது 13 வயது மகளுடன் வி.பி.காலனியில் பகுதியில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோசம்மாளின் மகள் வீட்டுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்த நேரம், ரோசம்மாள் வீட்டிற்கு வெளியே உள்ள ஆட்டுப் பட்டியில் படுத்துத் தூங்கியுள்ளார். நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்கவே, எழுந்து பார்த்த போது, 2 பேர் வீட்டிற்குள் இருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதி நோக்கி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 9½ பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த அவரின் புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe