திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மரியாதை!

Homage to martyrs Immanuel Sekaran photo in Trichy

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கட்சி முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Homage to martyrs Immanuel Sekaran photo in Trichy

இதனைத் தொடர்ந்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மண்டபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 இணை ஜோடிகளுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு ரூபாய் 70,000 மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe