நேற்று (27.05.2021) முன்னாள்பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மா. சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள், அண்ணா சிலை விக்டர் பஜார் மைதீன், இன்ஜினியர் நஜீர், ஆட்டோ பாலு, கோபி மற்றும் ஸ்ரீரங்கத்தில் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், அனந்த பத்மநாபன், செல்விகுமரன், முருகன், வடிவேல், பாத யாத்திரை நடராஜன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜவஹர்லால் நேரு நினைவு தினம்: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
Advertisment
Advertisment