Holidays on Sundays for Tasmac !!

Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரேநாளில் 2,182 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 60,533 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவாதுஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமுடக்கம்அமுல்படுத்தப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.