Published on 01/12/2021 | Edited on 01/12/2021

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் அதிகமாகத் தேங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக நீர் செல்கிறது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (02.12.2021) கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கொடுத்துள்ளார்.