வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, திருவாரூர், கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறுமாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.