தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், வல்லம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேபோல் திருமயம் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.