வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, அம்மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாககடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.