Advertisment

தூத்துக்குடி, கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 Holidays for schools and colleges in Tuticorin, Karur

Advertisment

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு (9/12/22) இன்று சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை என 23 மாவட்டங்களிலும் இன்று (9/12/22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து புதுச்சேரி காரைக்காலிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் வரும் காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர்,மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

karur Thoothukudi weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe