வடகிழக்கு பருவமழை காரணமாகத்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி வட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.