Holidays for primary schools in Vellore and Ranipet

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்றுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் செப். 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisment