Holiday notification for schools in 2 taluks in Nilgiris

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கனமழை காரணமாக உதகை மற்றும் குந்தா ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் மானவர்கள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.