Holiday notice for school and college in various districts due to rain!

கனமழை காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12/02/2022) விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisment

வளிமண்டல சுழற்சி காரணமாக, மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் வகுப்புகளைத் தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், தேர்வுகள் நடைபெறும் வகுப்புகளுக்கு விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.