Holiday announcement for schools and colleges due to heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுக் குறைந்து மேற்கு - வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கனமழை காரணமாகத் தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழை எச்சரிக்கை காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், தேனி, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (13.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.

Advertisment