கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Holiday announcement for schools and colleges in Cuddalore

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதே போன்று தமிழகத்தின் கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டன. அதாவது தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டன. அதன்படி வரும் 21ஆம் தேதி இந்த கலந்தாய்வு நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவித்திருந்தார்.

Holiday announcement for schools and colleges in Cuddalore

இதனையடுத்து கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

Cuddalore holiday rain
இதையும் படியுங்கள்
Subscribe