Holiday announcement for schools and colleges

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதே போல், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில்உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.