style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வசந்தத்தை வரவேற்கும் விதமாகவும், அரக்கி ஹோலிகா எரிக்கப்பட்டதை கொண்டாடும் வகையிலும் ஹோலி பண்டிகை ஆண்டு தோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரும் பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஒன்றான சவுக்கார்பேட்டையில் வண்ணப் பவுடர்களை ஒருவர் மேல் ஒருவர் பூசியும், நடனமாடியும் மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.