கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/heavy-rain_0.jpg)
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர்,நாகப்பட்டிணம், திருவாரூர்,சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us