
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டு இருவர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாண்டவர்மங்கலம் மைதானத்தில் பூசாலிப்பட்டி, தெற்குதிட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹாக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது இரு அணிகளின் வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இந்த மோதல் சம்பவத்தில் இருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஹாக்கி விளையாட்டின்போது ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் தொடர்பாகக் கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். விளையாட்டில் ஏற்பட்ட மோதல் சம்பவம் அங்குசற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us