hoarding Remdecivir

Advertisment

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தைபதுக்கி அதிக விலைக்கு விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புவனேஸ்வர், நிஷித் பண்டாரி ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தைவிற்றதாக சென்னையில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 2 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்போடெரிசின், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை தருவதாக இணையதளத்தில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.