Advertisment

ஹெச்ஐவி பாதித்த மாணவனை அலைக்கழிக்கும் அரசு பள்ளி!!

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சிறுவனை 10 ஆம்வகுப்பில் சேர்க்க மறுக்கப்பட்ட சம்பவம் பெரம்பூரில் நடந்துள்ளது.

Advertisment

எச்ஐவி பாதித்த இந்தசிறுவன் ஒருவன்ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெரம்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்த சிறுவனை பத்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காக மீண்டும் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உறவினர்களை அழைத்து வந்தனர்.

  HIV infected student affected by Government school

மாணவனின் தாய் கடந்த ஆண்டு எச்ஐவி பாதிப்பால்உயிரிழந்த நிலையில் லாரி டிரைவரான தந்தைக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து சிறுவனை பத்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளாமல் அரசுப்பள்ளி அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

Advertisment

ஆனால் குறிப்பிட்ட அந்த மாணவருக்கு கற்றல்திறன் குறைவாக இருப்பதாக தெரிவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ், பள்ளியில் சேர்ப்பதற்காக யாரும் தன்னை அணுகவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் அரங்கன்இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

AIDS student schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe