Advertisment

இளைஞரின் மரணத்தில் சந்தேகம்... தந்தை புகார் மனு...

mm

Advertisment

ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது என்று தெரியாமல் இரத்தத்தை தானமாக கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அந்த இளைஞரின் தந்தை போலீஸாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். மேலும் மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிறமருத்துவர்களை கொண்டு செய்யவேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

HIV Blood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe