mm

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது என்று தெரியாமல் இரத்தத்தை தானமாக கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.