publive-image

“நுழைவுத்தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்துநாளை இளைஞரணி, மாணவரணி இணைந்து போராட்டம் நடத்தும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது எனக் கூறி உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தினார்கள். பல்கலைக் கழக துணைவேந்தர்களிடமும் அதை பற்றி சொல்லி இருந்தார்கள். முதலமைச்சரிடம் அதை பற்றி சொன்னோம். அவர் உடனடியாக 53 கோடியே 20 லட்சம் அதற்காக ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். எனவே அந்த ஆசிரியர்களை நான் கேட்டுக் கொள்வது நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் உங்கள் ஊதியம் அளிக்கப்படும்.

Advertisment

இந்தி எதிர்ப்பு போரட்டம் என்பது புதிது அல்ல. திராவிடர் கழகம் தோன்றிய காலத்தில் இருந்து துவக்கப்பட்ட போராட்டம் தான் இது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நேற்று முன் தினம் இங்கு வந்த மத்திய இணை அமைச்சர் கூட இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்சேர்க்கப்படுகிற மாணவர்களுக்குக் கூட அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

எனவே நுழைவுத்தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்துதான் நாளை இளைஞரணி மாணவரணி இணைந்து போராட்டம் நடத்தும். ஆகவே, மீண்டும் வரலாறு திரும்பும் சூழ்நிலை உருவாகாமல் இருக்க வேண்டும். இதற்குமுன் நடந்த மொழிப்போரிலே பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி இன்றும் தொடர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துதான் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது.

மேலும், 100 ஏக்கர் நிலமும் 50 கோடி ரூபாய் பணமும் பல்கலைக்கழகத்தின் பேரில் இருந்தால் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகம் துவங்க அனுமதி அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.