உடல்நலக்குறைவால்இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகுஇறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின்வயது 79.
அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர்.
சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
அதன்பின்ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் ஜானி, கைக கொடுக்கும் கைஉள்ளிட்ட படங்களை இயக்கினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு,மெட்டி உள்பட 12 திரைப்படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.
2006ல்அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா நடித்த சாசனம் என்ற படம்தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படம். நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுஹாசினி, அஸ்வினி, அஞ்சுவை அறிமுகம் செய்து வைத்தவர் மகேந்திரன்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
துக்ளக்கில் பணியாற்றிய இவர் காட்டுப்பூக்கள், அர்த்தம் என்ற டிவி நாடகங்களையும் எடுத்துள்ளார். 2004ல் அவர் எழுதிய சினிமாவும் நானும் என்ற நூல் வெளியானது.
விஜயின் தெறி, ரஜினியின் பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.