'' His approval is not required '' - Director's argument for banning 'Talaivi' movie!

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் 'தலைவி'திரைப்படத்திற்குத்தடைவிதிக்கவேண்டும் எனஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜெயலலிதாவாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் 'தலைவி' படம் எடுக்க தடைவிதிக்க முடியாதுஎனபடத்தின்இயக்குனர் ஏ.எல்.விஜய்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘தலைவி’ படம் எடுக்க தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல்படத்தைதீபாதரப்பிடம்போட்டுக்காட்ட வேண்டிய தேவையும்இல்லை எனவும் இயக்குனர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.