Skip to main content

இஸ்லாமியர் இல்ல விழாவிற்கு தாம்பூலத்தில் சீர் கொண்டு போன இந்துக்கள்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Hindus dressed up for the Islamic Home Festival!

 

தமிழ்நாட்டில் தான் இந்து கோயில் குடமுழுக்கு உள்ளிட்ட திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் மதநல்லிணக்கத்தோடும், சகோதர பாசத்தோடும், ஆட்டம் பாட்டத்துடன் சீர் கொண்டு சென்று கொடுத்து நட்புறவை வலுப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்தேறுகிறது.

 

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் உள்ள மழையூர் கிராமத்தில் உள்ள முகமது சித்திக் என்பவரின் இல்லத்தில் குழந்தைகளுக்கு பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருந்தனர். முகமது சித்திக்கின் அழைப்பை ஏற்ற அப்பகுதி இந்து சகோதர, சகோதரிகள் மத வேறுபாடுகள் மறந்து தங்கள் உறவு வீட்டு நிகழ்வாக நினைத்து தாம்பூலங்களில் பழம் உள்ளிட்ட மாமன் சீர் எடுத்துச் சென்று விழாவில் கலந்து கொண்டனர். பொது நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் கூட நட்புறவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

108 ஆம்புலன்சில் பிரசவம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
108 Relatives praise the employees who gave birth in the ambulance

108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக உள்ளது. எந்த நேரத்திலும் எந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தாலும் அடுத்த குறிப்பிட்ட நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்கின்றனர்.

அதே போல நேற்று(17.3.2024) காலை ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்ட செந்தமிழ் (வயது 26) என்ற கர்ப்பிணிக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அவசர அழைப்பிற்கு ஆவுடையார்கோயில் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த செந்தமிழை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி செல்லும் வழியில் செந்தமிழுக்கு வலி அதிகமானது.

அதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜழகன் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த ஆம்புலன்சின் அவசர கால மருத்துவ நுட்புணர் ஐஸ்வர்யா பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாலை ஓரத்திலேயே ஆம்புலன்ஸில் வைத்தே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திலேயே  ஆண்குழந்தை பிறந்ததைப் பார்த்து அருகில் இருந்த உறவினர்கள் நிம்மதியடைந்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி நன்றி கூறினர். மேலும் சாலையோரம் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட பெண்ணும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். தொடர்ந்து கூடுதல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.