Skip to main content

அறநிலையத்துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

hindu religious related new announcement against village people stand

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - கடலூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் பேரூராட்சியில் உள்ள தர்மபுரி வீதியில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இக்கோயிலுக்கு வழிபாடு செய்ய முத்துப்பட்டி கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்வார்கள். மேலும் இந்தக் கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா தினசரி வழிபாடு ஆகியவற்றை இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப நிதி வசூல் செய்து அதன் மூலம் நிர்வாகம் செய்து வருகிறார்கள். வசூல் செய்த தொகையில் ஆண்டுதோறும் 21 நாட்கள் வெகு விமரிசையாகத் திருவிழா நடத்துவது வழக்கம்.

 

மேலும் திரௌபதி அம்மன் கோவில் சுமார் 150 ஆண்டு பழமையான நிலையில் இந்த கோயிலை தற்போது இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கண்ட அப்பகுதி மக்கள், எங்கள் அனைவருக்குமான பொதுக் கோயில் இது. இதற்குத் தனிப்பட்ட முறையில் எந்த சொத்து வருமானம் கிடையாது. எங்கள் வருமானத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலைப் பராமரிப்பு செய்து திருவிழா உட்பட அனைத்து உற்சவங்களையும் நடத்தி வருகிறோம். இந்நிலையில்  ஊர் மக்கள் ஒற்றுமையுடன் ஆண்டுதோறும் அமைதியான முறையில் திருவிழா நடத்தி பராமரித்து வந்த கோயிலை, அறநிலையத்துறையில் எடுத்துக் கொண்டு அதன் கட்டுப்பாட்டில் விழா நடத்த வேண்டும் என்று யாரோ அளித்த புகார் மனுவின் அடிப்படையில் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடத்தினார்கள்.

 

இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை வருவாய்த்துறையினர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆண்டு திருவிழா நடத்திக் கொள்ளலாம் அதில் காவல்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட மாட்டார்கள். அடுத்த ஆண்டு திருவிழாக்கள் நீதிமன்றத்தை நாடி கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா நடத்துவது சம்பந்தமாக உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருவிழா நடத்தி முடித்தவுடன் கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தை அணுகப் போவதாக முடிவு செய்துள்ளனர். கோவிலைப் பாதுகாக்க நடத்திய போராட்டம் மரக்காணம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.