சிதம்பரம் தெற்கு வீதியில் தனியார் ஹோட்டல் மாடியில், இந்து முன்னேற்றக் கழகம் சார்பில் சிதம்பரம் நகரப் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் மற்றும் போலீசார், தேர்தல் விதி அமலில் உள்ளதால் அனுமதி பெறாமல் கூட்டத்தை நடத்தக் கூடாது எனக் கூறி, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை வெளியேற்றி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருவாய்த் துறை, காவல்துறையின் செயல்பாடு கண்டிக்கதக்கது. விரைவில் அனுமதி பெற்று, திறந்த வெளியில் மிகப் பெரிய கூட்டமாக நடைபெறும்” என்றார்.
அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்திய இந்து முன்னேற்ற கழக நிர்வாகிகள்..!
Advertisment