Hindu People's Party petitions to stop lottery ticket sales

ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் 6ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் அதன் நிர்வாகிகள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Advertisment

பிறகு அவர்கள் கூறும்போது, “ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

அதுவும் பெண்களை வைத்தே லாட்டரி சீட்டுகளை எழுதி வாட்ஸ் அப் மூலமாக விற்பனை செய்கிறார்கள். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், லாட்டரி சீட்டில் பணத்தை செலுத்தி தங்களது வருமானத்தில் முழுமையாக இழந்து வருகிறார்கள். பல குடும்ப பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையைத்தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.