Hindu People's Party members who tried to light the lamp in violation of the ban were arrested

Advertisment

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீபத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மலைக்கோயில்களில் தீபத்திருவிழா நடைபெற இருக்கிறது.

இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற முயன்ற 500 க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில், கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் தடையை மீறி மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற முயன்றனர். இதனால் இந்துஇந்து மக்கள் கட்சியின் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.